முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இதுதான் திராவிட மாடல் ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

இதுதான் திராவிட மாடல் ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எல்லாருக்குமே எல்லாம் என்பது தான் திராவிட மாடலின் சித்தாந்தம், இதை ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளேன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியூஸ் 18க்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். 

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுகொண்ட பின்னர் அளித்துள்ள முதல் சிறப்பு நேர்காணல் இதுவாகும். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள இந்த சிறப்பு நேர்காணலில், தமிழக அரசியல், திராவிட மாடல்,  2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்.

அதில் நெறியாளர் திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’அண்ணா ஆட்சி நடைபெறும்போது, அண்ணா ஆட்சி’ என தெரிவித்தார்கள். கருணாநிதியின் ஆட்சி செயல்படும்போது கலைஞர் கருணாநிதி ஆட்சி என தெரிவித்தார்கள். தற்போது ஸ்டாலின் ஆட்சி நடைபெறுகிறது. இது ஸ்டாலின் ஆட்சி இல்லை.  திராவிட மாடல் ஆட்சி என்றுதான் குறிப்பிட வேண்டும். அண்ணா ஆட்சியும் ,கலைஞர் ஆட்சியும் சேர்ந்ததுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி’ என தெரிவித்தார். 

எல்லாருக்குமே எல்லாம் என்பதுதான் திராவிட மாடலின் சித்தாந்தம், இதை ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் பெரியார் ஆசை, ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. அதேபோன்று கலைஞர் கருணாநிதிக்கும் மக்களுக்கு பல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நிறைவேற்றமுடியவில்லை. தற்போது என் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அவர்களால் செயல்படுத்த முடியாத திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவதே திராவிட மாடல் ஆட்சியாகும் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, MK Stalin, News18 tamil, News18 Tamil Nadu