முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமை தொகை எப்போது..? அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமை தொகை எப்போது..? அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் 6 எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது உள்ளிட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அது தொடர்பாக சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் 6 எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

எரிசக்தி துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், போக்குவரத்து, பொதுப்பணி, தொழில் முதலீடு, கைத்தறி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறை சார்ந்த விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

First published:

Tags: CM MK Stalin, Tamilnadu government