ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: இன்று முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: இன்று முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

இந்த ஆலோசனை கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஆலோசனை.. நாளை அமைச்சரவை கூட்டம்.. உதயநிதி வெளியிடப்போகும் 2 அசத்தல் அறிவிப்புகள் இதுவா? 

இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, Pongal 2023, Pongal Gift