ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு.. முக்கிய ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு.. முக்கிய ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வு வழக்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் 2022 ஆம் ஆண்டு சில திருத்தங்கள் செய்து ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த மாத தொடக்கத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் மசோதா குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஒவ்வொரு முறையும் ஏன் வழக்கை ஒத்திவைக்க கோருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நீட் வழக்குகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: CM MK Stalin, Neet Exam, Supreme court