ஸ்டாலின் தான் வராரு... வைரலாகும் முதல்வர் சைக்கிள் பயணம்

ஸ்டாலின் சைக்கிள பயணம்

மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது அவருடன் பொதுமக்கள் பலர் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 • Share this:
  முதல்வர் மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

  முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் ஆரேக்கியத்தில் மிகவும் அக்கறை கொண்டவர். உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிளிங் உள்ளிட்ட பல பயிற்சிகளை செய்து வருகிறார்.

  மு.க.ஸ்டாலின் வார விடுமுறை நாட்களில் கிழக்கு கடற்கரை சாலைகளில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. கொரோனா ஊரடங்கு காரணமாக மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் செல்லுவதை தவிர்த்து வந்தார்.

  தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற கொண்ட பின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.

  மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது அவருடன் பொதுமக்கள் பலர் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நடிகை யாஷிகா ஆனந்தும் முதல்வர் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  மேலும் ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்து கொண்டே மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: