முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டைப் போன்று நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிற்கே விடியல் வரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டைப் போன்று நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிற்கே விடியல் வரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை கொரட்டூரில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பரிதி இளம்வழுதி தன் உயிர் நண்பர் என்றும் தன் மீது அதிக பாசம் கொண்டவர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

கருணாநிதி 5 முறை முதலமைச்சராக பதவி வகித்ததாகவும், அவரது பேனா எப்போதெல்லாம் தலைகுனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலைநிமிர்ந்ததாகவும் குறிப்பிட்டார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என்ன ஆனது என்று கேள்வியெழுப்பிய முதலமைச்சர், மக்களவையில் திமுக எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பதில்லை என்றும் குறைகூறினார்.

திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசிய உப்புமா கதை போல் தான் இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடைபெற்று வருவதாகக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவிற்கு விடியல் ஏற்படுத்தி தரக் கூடியதாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, DMK