ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இறுதி மூச்சு வரை கொள்கைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தவர் - சரத்யாதவ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்!

இறுதி மூச்சு வரை கொள்கைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தவர் - சரத்யாதவ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்!

சரத் யாதவ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சரத் யாதவ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சரத் யாதவ் எமர்ஜென்ஸி காலத்தில் பொதுவாழ்வுக்கு வந்தவர் என்பதும், இவர் 7 முறை மக்களவை உறுப்பினராகவும், 3 முறை மாநிலங்களை உறுப்பினராகவும் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bihar, India

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 75. குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்ததாக அவரது மகள் சுபாஷினி யாதவ் ட்விட்டரில் அறிவித்தார்.

அவரது மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவின் மூலம் இரங்கல் தெரிவித்தார். சரத் யாதவ் எமர்ஜென்ஸி காலத்தில் பொதுவாழ்வுக்கு வந்தவர் என்பதும், இவர் 7 முறை மக்களவை உறுப்பினராகவும், 3 முறை மாநிலங்களை உறுப்பினராகவும் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் பதிவில், RJD தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

தனது இறுதி மூச்சு வரை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்த மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என தெரிவித்திருக்கிறார்.

First published:

Tags: CM MK Stalin, RJD