• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • என் ஊர்க்காரர்... கலைஞரால் புகழப்பட்டவர்... கவிஞர் பிறைசூடன் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்

என் ஊர்க்காரர்... கலைஞரால் புகழப்பட்டவர்... கவிஞர் பிறைசூடன் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் பிறைசூடன் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் பிறைசூடன் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்

பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான பிறைசூடன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கவிஞர் பிறைசூடன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் - உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர் திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

    பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றுள்ளார்.

    1980ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனால் ‘சிறை’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டு 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் பிறைசூடன்.

    பக்தி பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட பிறைசூடன் ஐயாயிரத்திற்கும் அதிகமான பக்தி பாடல்களை எழுதி ஆன்மீக பக்தர்கள் இடையே அதிகம் புகழ் பெற்றவராக திகழ்ந்தார். ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் இடம் பிடித்த ‘சோலப் பசுங்கிளியே...’ என்ற பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வென்றார் பிறைசூடன்.

    Also Read : ஹனிமூனில் இருக்கிறார்கள்... திமுக ஆட்சி குறித்து 6 மாதம் கழித்து பேசுவேன் - குஷ்பு

    விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் வர்த்தக ரீதியில் புகழ்பெற்ற பாடலாசிரியராக பிறைசூடனை அடையாளம் காட்டியது. கோபுர வாசலிலே திரைப்படத்தில் இடம் பிடித்த ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’, இதயம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இதயமே இதயமே’ உள்ளிட்ட பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களாய் இன்னும் தமிழ் ரசிகர்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

    ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களிலும், இலக்கியக் கூட்டங்களிலும் தொடர்ந்து பேசி வந்த பிறைசூடன் மதிய உணவிற்கு பிறகு குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது மரணமடைந்தது அவரது குடும்பத்தினரையும் திரை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: