டெல்லி மற்றும் மும்பையில் பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மோடி அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பழிவாங்கப்படுவோர் வரிசையில் தற்போது பிபிசி நிறுவனத்தையும் சேர்த்துள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர், பாஜக ஆட்சியில் மதிப்புமிக்க விசாரணை அமைப்புகள் சுதந்திரத்தை முற்றிலும் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய ஜனநாயகத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாஜக அரசு அழித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், இத்தகைய ஜனநாயக விரோத செயல்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிபிசி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் ஆய்வு செய்வது, அறிவிக்கப்படாத அவசரநிலை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலில் பிபிசி ஆவணப்படத்தை தடை செய்தனர், தற்போது பிபிசி அலுவலகங்களில் ஆய்வு செய்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் ஊடக சுதந்திரத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள காங்கிரஸ், சர்வாதிகாரம் கோழைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BBC, CM MK Stalin, PM Modi