முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடைசி நாள் பரப்புரை... ஈரோட்டில் முகாமிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கடைசி நாள் பரப்புரை... ஈரோட்டில் முகாமிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin Campaign Today in Erode East | கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதில் கலந்து கொள்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் கோவை சென்றார். கோவை விமானநிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து விமான நிலைய சிறப்பு நுழைவு வாயில் அருகே காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர், தொண்டர்கள் கொடுத்த புத்தகங்களை பெற்றுக் கொண்டார். விமான நிலையம் சாலை நெடுகிலும் முதலமைச்சருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்ற முதலமைச்சர், சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை 9 மணிக்கு ஈரோடு சம்பத் நகரில் பரப்புரை தொடங்கும் அவர், பின்னர் பெரியவலசு, பாரதி தியேட்டர் சாலை, பேருந்து நிலையம், மஜீத் வழியாக வாக்கு சேகரித்து, கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பேச உள்ளார்.

அதைத் தொடர்ந்து, கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை வழியாக பிராமண பெரிய அக்ரஹாரம் சென்று, அங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பின்னர், சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கும் முதலமைச்சர், மாலை 3 மணிக்கு முனிசிபல் காலனியில் பேசிய பிறகு, பன்னீர்செல்வம் பூங்கா வழியாக, பெரியார் நகர் சென்று மாலை 3.45 மணியளவில் தனது பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.

இதனிடையே, பகல் 12 மணியளவில் குருசாமி கவுண்டர் மண்டபத்தில் பிரச்சாரத்தை தொடங்கும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இடையன்காட்டு வலசு, மணிக்கூண்டு வழியாக பெரியார் நகர் ஆர்ச் அருகே பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

First published:

Tags: CM MK Stalin, Erode Bypoll, Erode East Constituency, EVKS Elangovan