முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "நீண்ட ஆயுள், நிறைந்த ஆரோக்கியம்.." முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

"நீண்ட ஆயுள், நிறைந்த ஆரோக்கியம்.." முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல்வருக்கு வாழ்த்து

முதல்வருக்கு வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இத்னை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், பெரியார் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறும் அவர், மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார் .

முன்னதாக நேற்று சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயிலும் லிட்டில் பிளவர் பள்ளியில் கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து மாணவர்களின் நடன நிகழ்ச்சியை முதலமைச்சர் கண்டுரசித்தார். இந்த நிலையில் முதலமைச்சருக்கு ஆளுநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... மக்களுக்கு "தி"னமும் "மு"ழு உடல் நலத்துடன் "க"டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, DMK