Home /News /tamil-nadu /

இலவச பேருந்து திட்டம் பொருளாதார புரட்சி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

இலவச பேருந்து திட்டம் பொருளாதார புரட்சி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

மகளிருக்கான இலவசப் பேருந்துத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் மாநிலத் திட்டக் குழுவின் மூன்றாவது குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்குத் திட்டக்குழு பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார். எந்த கொள்கையாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை தருவதாகவும், மாநிலத்தின் வளச்சிக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை இலவசம் என்று குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், ஏழை, எளிய மக்களிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார புரட்சியாக கருத வேண்டும் என்று கூறினார்.

    தொடக்கம் முதல் எத்தகைய ஆர்வத்துடன் ஆலோசனைகள் வழங்கப்படுகிறதோ அதைப் போலவே வருங்காலத்திலும் பங்களிப்பு தொடர வேண்டும் என உறுப்பினர்களிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அரசு திட்டங்கள் குறித்து மற்ற மாநில அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கூறும் கருத்துக்களை அறிந்திருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்

    மாவட்டங்களின் தனித்தன்மையை வரையறுத்து சில பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம் - பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என தான் விரும்புவதாக தெரிவித்தார்.

    பிற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுத்தக்கூடிய திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மாநிலத் திட்டக் குழு எடுத்துள்ள முயற்சிகள் அரசின் செயல்பாட்டிற்கு தூண் போல் நின்று உதவுவதாக பாராட்டிய முதலமைச்சர், . அந்தப் பணியைத் தொடர்ந்து ஆற்றி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்துக் கொடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: CM MK Stalin, Govt Bus

    அடுத்த செய்தி