ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் நிதி வழங்கிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

  அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின்மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

  தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு - திருமாவளவன் பேச்சு! (news18.com)

  இந்த அறிவிப்பின்படி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 65 லட்சம் தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் இன்று உத்தரவிட்டார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Thoothukudi Sterlite