ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் கொடை ரூ.3000 ஆக உயர்வு : முதலமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் கொடை ரூ.3000 ஆக உயர்வு : முதலமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

கோயில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு நடப்பு மாதம் முதல் அகவிலைப்படியை 34 %ல் இருந்து 38 % ஆக உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

அனைத்து கோயில் பணியாளர்களுக்குமான பொங்கல் கருணைக்கொடை, ரூ. 2,000ல் இருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.1000 இருந்து ரூ. 3000 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம், ரூ. 1000ல் இருந்து ரூ.4000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கோயில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு நடப்பு மாதம் முதல் அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து கோயில் பணியாளர்களுக்குமான பொங்கல் கருணைக்கொடை, ரூ. 2,000ல் இருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் அரசுக்கு 8.5 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும். திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000/-த்தை ரூ.3,000/- ஆக உயர்த்தியும், ரூ.3,000/-த்தை கிராமக் கோயில் ரூ.4,000/- பூசாரிகளுக்கான உயர்த்தியும் ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டது. திருக்கோயிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம் விலக்களித்து, அப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5.000/-ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு இணை புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு 01.01.2023 முதல் அகவிலைப்படியை 34 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம். சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால் ஆண்டொன்றுக்கு ரூ. 7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

மேலும், அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம். பகுதிநேரம். தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.2,000/- ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ 3000/- ஆக உயர்த்தி வழங்கிட  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனால், இவ்வாண்டு ரூ. 1.5 கோடி இந்த அறிவிப்புகள் திருக்கோயில் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அவர்தம் குடும்பத்தாரோடு உற்சாகமாக கொண்டாடிட வழிவகை ஏற்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டது.

First published:

Tags: CM MK Stalin, Hindu Temple, Pongal 2023