முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர்களின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் ஐம்பது மாணவர்களுக்கு கல்வி விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும்.

  • Share this:
    தமிழ்நாட்டில், அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கை அகதிகள் முகாம், வீடுகள் பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது போன்ற அவர்களுக்கு தேவையான 14 பணிகளுக்கு 100 கோடி ஒதுக்கி செய்து கொடுத்தவர் கலைஞர் மு.கருணாநிதி.

    முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அடிப்படை வசதியில்லாமல் இருக்கும் இலங்கை தமிழர்கள் வாழ்க்கை தரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பழுதடைந்த 7,469 வீடுகள் 231 கோடி செலவில் கட்டித்தரப்படும். இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இதில், முதற்கட்டமாக 108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும்.

    இலங்கை தமிழர்களின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் ஐம்பது மாணவர்களுக்கு கல்வி விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். மதிப்பெண் அடிப்படையில் வேளாண் படிப்புகளில் கல்வி மற்றும் விடுதி கட்டணங்கள் ஏற்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும், அரசு கலைக்கல்லூரி, பட்டய படிப்பு படித்து வருபவர்களுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு உதவித்தொகை 10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

    இலங்கை தமிழர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியாக தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு அவர்கள் பெறும் முழு அரிசின் அளவும் விலையில்லாமல் வழங்கப்படும்.

    Must Read : மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்தே ஆகவேண்டும் - தமிழக சட்டமன்றத்தில் ஒருமித்த குரல்

    முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் அகதிகளுக்கும், வெளியில் வசிக்கும் அகதிகளுக்கும் குடியுமை பெறுவது, இலங்கை செல்வது போன்ற இதர வசதிகளை மேம்படுத்திடவும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை கொண்டு ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களை காக்கும் அரசாக இருக்கும் தமிழக அரசு இருக்கும். திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 115 வெளிநாட்டினர் உள்ளனர். இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
    Published by:Suresh V
    First published: