ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கு, 7.1 கோடியே ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் திருநாளை ஒட்டி போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 1,17,129 போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கு, 7.1 கோடியே ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது.

2022 ஆம் ஆண்டில் 91 நாட்களில் இருந்து 151 நாட்களுக்குள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும், 151 நாட்களில் இருந்து 200 நாட்களுக்குள் பணியாற்றியவர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிற்கிணங்க சாதனை ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Pongal, Transport workers