தமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் பேசியதாவது, கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக் கொணரக்கூடிய வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய கிராம ஊராட்சித் தலைவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில், நான் துணை முதல்-அமைச்சராகவும், துறையினுடைய அமைச்சராகவும் இருந்தபோதுதான், கருணாநிதியால் உத்தமர் காந்தி கிராம ஊராட்சி என்ற விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது.
அந்த வகையில், 2006 முதல் 2010-ம் ஆண்டு வரை, 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு முதல் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
Also Read : சமயபுரம், பழனி உள்ளிட்ட 10 கோவில்களில் பிரசாதம் இலவசம் - அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
சிறப்பாகச் செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும். ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.