கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கபடி போட்டியின்போது உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர்
ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் மதுரா மானகுப்பம் கிராமம் தெற்கு தெருவில் உள்ள புளியதோப்பு மைதானத்தில் கடந்த 24-ம் தேதி மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடி போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு வருத்தமடைகிறேன்.
உயிரிழந்தவரின் பெற்றோர்க்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த விமல்ராஜ் குடும்பத்தினருக்கு ரூபாய் 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
Also Read : செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி படத்தை ஒட்டிய பாஜக.. மை பூசி அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு உடனே, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விமல்ராஜ்க்கு தாய், தந்தை (கண்பார்வையற்றவர்) தங்கை உள்ளனர். இவர்கள் வாழ்வாதராம் விமல்ராஜை நம்பிதான் இருந்தது. ஆனால் அவர் கபடி விளையாடும் களத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதனால், வாழ்வாதாரம் இழந்து நிற்கதிகாய நிற்கும் அவரின் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்களும் நண்பர்களும், சக விளையாட்டு வீரர்களும் கோரிக்கை வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.