சென்னை கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பங்களுடன் இணைந்து முதலமைச்சர் பொங்கல் விழாவை கொண்டாடினார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், அமைச்சருமான உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு பறை இசை, மேளதாளம் நாதஸ்வரம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் குடும்பத்தினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் வைத்து வழிபட்டார். தொடர்ந்து, காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுத்தொகுப்புகளை வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் தங்கள் குடியிருப்புக்கு நேரில் வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததாக காவலர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பின்னர் காவலர் குடும்பத்தினருடன் முதலமைச்சர் புகைபடம் எடுத்துகொண்டார். இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி பிரமுகர்களுடன் பொங்கலை கொண்டாடினார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மற்றும் மகன்களுடன் பொங்கலை கொண்டாடினார். நாற்காலியில் அமர்ந்தபடி விஜயகாந்த் பொங்கல் பண்டிகையை ரசித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Pongal 2023, Udhaya