சென்னை கொரட்டூரில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தனது தந்த கருணாநிதி 5 முறை முதலமைச்சராக பதவி வகித்ததாகவும், அவரது பேனா எப்போதெல்லாம் தலைகுனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலைநிமிர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, சேது சமுத்திரம் திட்டம், வேலை வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து டிஆர் பாலு உள்ளிட்ட திமுக எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பதில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், மதுரையிலிருந்து செங்கலை எடுத்து வந்து தமிழ்நாடு முழுவதும் உதயநிதி கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இரண்டாவது முறையும் உதயநிதி செங்கல்லை எடுத்துக்கொண்டு வலம் வரப்போகிறார் தமிழ்நாட்டைப் போன்று நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிற்கே விடியல் வரும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
பிரதமர் மோடி கருப்பு பணத்தை மீட்டு பொது மக்களின் ஒவ்வொரு வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்ததாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இதுவரை 15 ஆயிரம் ரூபாய் அல்லது ஒரு 15 ரூபாய் கூட வங்கி கணக்கில் செலுத்தவில்லை என விமர்சித்தார். திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசிய உப்புமா கதை போல் தான் இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.