அப்பலோ மருத்துவமனையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆன்ஜியோ அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அப்பலோ மருத்துவமனையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி
திண்டுக்கல் சீனிவாசன் - முதல்வர் பழனிசாமி
  • News18
  • Last Updated: October 23, 2020, 3:32 PM IST
  • Share this:
சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆன்ஜியோ அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் அமைச்சரிடம் நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது.


Also read... வெற்றிபெற்றுவிடுவோம் என்ற மமதையில் இருக்கவேண்டாம் - நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..



மேலும், கடந்த வாரம் முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து காரில் சேலம் சென்ற வேளாண் துறை அமைச்சர் துரைக்க்கண்ணுவுக்கு வழியிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைகாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading