அத்திவரதரை தரிசித்த சந்திரசேகர ராவ் மற்றும் ரோஜா!

ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மூத்த சகோதரன் என்ற முறையில் முழு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக சந்திரசேகர ராவ் உறுதியளித்தார்.

Web Desk | news18
Updated: August 13, 2019, 10:25 AM IST
அத்திவரதரை தரிசித்த சந்திரசேகர ராவ் மற்றும் ரோஜா!
சந்திரசேகர ராவ் மற்றும் ரோஜா
Web Desk | news18
Updated: August 13, 2019, 10:25 AM IST
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்து தெலுங்கு மக்களின் வளர்ச்சிக்கு புதிய சரித்திரம் படைக்க உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உறுதியளித்துள்ளார்.

காஞ்சிபுரம் வந்த சந்திரசேகர ராவ், தனது குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார். அப்போது, நடிகையும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்எல்ஏ-வுமான ரோஜா-வும் தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பும் வழியில், நகரி பகுதியில் ரோஜாவின் இல்லத்துக்கு சந்திரசேகர ராவ் சென்றார்.

மதிய உணவை அளித்து ரோஜா உபசரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிநீரை இரு மாநிலங்களின் ஒவ்வொரு பகுதியிலும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மூத்த சகோதரன் என்ற முறையில் முழு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக சந்திரசேகர ராவ் உறுதியளித்தார்.

Also see... அத்திவரதர் : அலைமோதும் கூட்டம் - கடைசிநாள் தரிசனம் ரத்து


Loading...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...