Home /News /tamil-nadu /

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது: 2021ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது: 2021ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கு விருதுக்காக விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    2021ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால்  முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. கணினித்தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது கடந்த 2013ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி 2021ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

    விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2021 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து,  தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    இதையும் படிங்க: மதுரையில் எய்ம்ஸ் ஒரு செங்கலோடு நிற்பதுபோன்று நிப்பரும் மாறிவிடக் கூடாது: மக்களவையில் சு.வெங்கடேசன் பேச்சு


    விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.12.2021

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
    தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
    தமிழ் வளர்ச்சி வளாகம்,
    தமிழ்ச்சாலை, எழும்பூர்,
    சென்னை - 600 008

    தொடர்புக்கான தொலைபேசி எண்கள்/ மின்னஞ்சல் முகவரி: 044 - 28190412  /  044 - 28190413 tvt.budget@gmail.com

    மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு: முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்பு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Tamilnadu government

    அடுத்த செய்தி