தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் - பல்வேறு நிறுவனங்களோடு முதலமைச்சர் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதலமைச்சர்

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்களோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த நிலையில் அந்த முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள கடந்த ஐந்து மாதங்களில் நாட்டிலேயே அதிகமான அளவிற்கு முதலீடு ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

கடந்த 5 மாதங்களில் 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 30,664 கோடி முதலீடுகள் ஈர்க்கபட்டள்ளது.. இதன் மூலம் 67,212 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.Also read... எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி - கே.பி.முனுசாமி திட்டவட்டம்

மேலும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கும் வகையில் புதிய தொழிற் கொள்கையும் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், நாளை காலை 12 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார்.
இதன் மூலமாக ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: