எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டே முதல்வர் செயல்பட்டு வருகிறார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டே முதல்வர் செயல்பட்டு வருகிறார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டே முதல்வர் செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரஷ்யன் கல்ச்சர் சென்டரில் நடைபெற்ற இந்தோ - ரஷ்யா ஐடி அசோசியேஷன் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தோ - ரஷ்யா ஐடி அசோசியேசன் தலைவராக அனிருத் பாலாஜி பொறுப்பேற்ற கொண்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழகத்தில் ஐடி துறை பின்னவடைவில் இருந்தது
ஐடி சார்ந்த கல்வியில் பயின்றவர்கள் முன்பொரு காலத்தில் பெங்களூரை நோக்கி செல்லும் சூழல் இருந்தது. ஆனால் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தான் தமிழகத்தில் ஐடி துறை வளர்ச்சி கண்டது. ஐடி துறைக்கு என்று தனி பாலிசியை உருவாக்கியவர் கருணாநிதி. எனவே அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டே செயல்பட்டு வருகிறார்.

Also read: மாதந்தோறும் மின் கணக்கீடு... அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கவில்லை அவர்கள் படிக்கும் பொழுதே அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் காத்திருப்பதை உணர்த்த வேண்டும் என்பதற்கேற்ப தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற ரஷ்ய போன்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனவே இந்தியாவுக்கு வாருங்கள் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பணியாற்றுவோம் என்று ரஷ்யாவிற்கு அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கோரிக்கை வைத்தார்.
Published by:Esakki Raja
First published: