நீட் தேர்வுக்கு தயாராகிய மாணவர் தற்கொலை- குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்

அரியலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வு தயாராகிவந்த மாணவரின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கு தயாராகிய மாணவர் தற்கொலை- குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்
முதல்வர்
  • News18
  • Last Updated: September 10, 2020, 5:29 PM IST
  • Share this:
மாணவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் தற்கொலை போன்ற முடிவை எடுப்பது மனவேதனை தருவதாக கூறியுள்ளார். வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மனஉறுதியையும், விடா முயற்சியையும் கைவிடக்கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளார்.Also read... செப்டம்பர் 28 வரை வங்கிக் கடன் தவணை ஒத்திவைப்பு நீட்டிப்பு- உச்ச நீதிமன்றம்


மாணவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையோடு இருக்குமெனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இதுபோல் மாணவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading