ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்தவது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளட்ட 7 பேரை விடுவிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் 2018ம் ஆண்டு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி. அதை ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. ஆனால், இந்த தீர்மானத்திற்கு ஆளுநர் 3 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கவில்லை.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளவனும் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் அளித்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சனிக்கிழமைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த முதல்வர் பழனிசாமி 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தி உள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலையில் ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Edappadi palanisamy