தமிழகம் முழுவதும் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி

கடை

நோய்த்தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்த சூழ்நிலை நீடிக்க எதிர்வரும் பண்டிகை காலங்களில், நோய்த்தொற்று அதிகரிக்காமல் தடுக்க கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்

 • Share this:
  ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் காய்கறிக்கடைகள், உண்வகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள், மற்றும் வணிக வளாகங்களும் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க முதலமைச்சர் பழனிசாமி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

  ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் காய்கறிக்கடைகள், உண்வகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள், மற்றும் வணிக வளாகங்களும் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க முதலமைச்சர் பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார்.

  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் தொழில்கள் முடங்கின. இந்நிலையில், நோய்த்தொற்றை கட்டுக்குள்கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் அதேவேளையில், பொதுமக்களின் தேவைகளைபூர்த்தி செய்யவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

  படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள், கடைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.

  இந்நிலையில், ஆயுத பூஜை தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால், அதனை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழுக்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக்கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுள்ளிட்ட அனைத்து அகடைகள் மற்றும் வணிக வளாகங்களும் நாளை (அக்டோபர் 22) முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  மேலும், நோய்த்தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்த சூழ்நிலை நீடிக்க எதிர்வரும் பண்டிகை காலங்களில், நோய்த்தொற்று அதிகரிக்காமல் தடுக்க கடைகள், பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும், முகக்கவசம் அணிவதையும், 6 அடி இடைவெளி கடைப்பிப்பதையும் அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிக்கவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Yuvaraj V
  First published: