• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Chennai Metro Fare: சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் அதிகபட்சம் ₹70 இருந்து ₹50 ஆக குறைப்பு - முதல்வர் அறிவிப்பு

Chennai Metro Fare: சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் அதிகபட்சம் ₹70 இருந்து ₹50 ஆக குறைப்பு - முதல்வர் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில்

Chennai Metro Train Fare | மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு வரும் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் .

  • Share this:
    சென்னை மெட்ரோ ரயில்களில் அதிகபட்ச கட்டணம் ₹70 இருந்து ₹50 ஆக குறைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் நோக்கில் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.  அதன்படி இரண்டு கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் தொலைவிலான மெட்ரோ ரயில் சேவைக்கு 20 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட உள்ளது.

    இதற்கு முன்னதாக 4 கிமீ வரையிலான தூரத்திற்கே 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே போன்று தற்போது 6 கிலோமீட்டரில் இருந்து 12 கிலோ மீட்டர் வரை 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் 12 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்வதற்கு 30 ரூபாய் செலுத்தினால் போதும் .

    12 கிலோ மீட்டரிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரம் வரை மெட்ரோவில் பயணம் செய்ய 50 ரூபாய் கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் 12 கிலோ மீட்டரிலிருந்து 21 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்வதற்கு 40 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.



    மெட்ரோவில் அதிகபட்ச கட்டணமாக தற்போது 70 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயிலில் 32 கிலோ மீட்டர் பயணிக்க அதிகபட்ச கட்டணமாக 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    க்யூ.ஆர். கோடு  மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் - தற்போதுள்ள கட்டம்- ஒன்றின் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 100 ரூபாய் ஆகும்.

    தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 100 ரூபாயாகவே இருக்கும்.

    ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் – தற்போதுள்ள கட்டம்- ஒன்றின் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 2500 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 2500 ரூபாய் கட்டணம்தான்.

    ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தள்ளுபடியும் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு வரும் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: