பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலம் நீர் மேலாண்மை செய்து நீரை பாசனத்திற்கு பயன்படுத்துமாறு விவசாயிகளை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News18 Tamil
Updated: August 13, 2019, 9:16 AM IST
பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலம் நீர் மேலாண்மை செய்து நீரை பாசனத்திற்கு பயன்படுத்துமாறு விவசாயிகளை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News18 Tamil
Updated: August 13, 2019, 9:16 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதை அடுத்து அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக,   தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி .

கர்நாடக மாநிலம் மற்றும் அங்குள்ள அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வார மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள அணைகள் 90 விழுக்காடு நிரம்பி விட்டன. 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 121.80அடியாக உள்ளது.

அணைக்கு 1,43,197 கனஅடி நீர் வரும் நிலையில், 49739 கனஅடி மட்டுமே வெளியேற்றப்படுகிறது. அதே போல, 65 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம், 63 அடியாக உள்ளது. அணையில் 18.4 டிஎம்சி நீர் இருப்பும், வினாடிக்கு 38,185 கனஅடி நீர் வரும் நிலையில், 35 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்து 84739 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


அதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்றிரவு நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.

இதையடுத்து அணையின் 16 கண் உபரி நீர் போக்கி கதவணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரியை வரவேற்று மலர் தூவி வணங்கினர்.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து விட்டார்.

Loading...

டெல்டா பாசனம்:

அணை நீர் திறப்பு மூலம் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு அதன் மூலம் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலம் நீர் மேலாண்மை செய்து நீரை பாசனத்திற்கு பயன்படுத்துமாறு விவசாயிகளை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

86-வது ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுவரை ஜூன் 12-ம் தேதிவாக்கில், 15 முறையும், ஜூன் 12-க்கு முன்னதாக 11 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடர்ந்து, 8-வது ஆண்டாகவும், ஒட்டுமொத்தமாக 60-வது ஆண்டாகவும் தாமதமாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

 
First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...