Home /News /tamil-nadu /

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: முதல்வர் பழனிசாமி மரியாதை

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: முதல்வர் பழனிசாமி மரியாதை

  • Last Updated :
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 112 வது ஜெயந்தி விழா மற்றும் 57 வது குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த காலத்தில் செய்த சேவை, மக்கள் மனதில் குடி கொண்டிருப்பதாக கூறினார். குருபூஜை தினத்தை அரசு விழாவாக அறிவித்தது, தங்கக் கவசம் கொடுத்தது போன்றவற்றை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், முத்துராமலிங்கத் தேவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். லேசான மழை தூறிக் கொண்டிருந்த நிலையில், குடை பிடித்தபடி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செய்தார்.

Watch Also:
Published by:Yuvaraj V
First published:

Tags: Devar Jayanthi, Muthuramalinga Thevar, Thevar Jayanthi

அடுத்த செய்தி