• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கேரளாவைப் போல தமிழகத்துக்கும் செய்ய வேண்டும் - பியூஷ் கோயலுக்கு முதல்வர் கடிதம்

கேரளாவைப் போல தமிழகத்துக்கும் செய்ய வேண்டும் - பியூஷ் கோயலுக்கு முதல்வர் கடிதம்

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் முதலமைச்சர் பழனிச்சாமி

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் முதலமைச்சர் பழனிச்சாமி

cyclone gaja: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில் மூலமாக அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு, கேரள வெள்ளத்தின் போது செய்ததைப் போல சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்களிக்க வேண்டுமென பியூஸ் கோயலை முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில் மூலமாக நிவாரணம் அனுப்புபவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அண்மையில் தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளதை தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக 4 கடலோர மாவட்டங்களில் கஜா புயல் கோரதாண்டவம் ஆடியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானவர்கள் வீடு, கால்நடை, தோட்டம் என வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு உதவும் விதமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்களை மக்களை அனுப்பி வருவதையும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில்மூலமாக அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு, கேரள பெருவெள்ளத்தின் போது செய்ததைப் போல சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்களிக்க வேண்டுமென பியூஸ் கோயலை வலியுறுத்தியுள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: