சட்டமன்ற அறிவிப்புகளைத்தான் தி.மு.க தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

முதல்வர் பழனிசாமி

அ.தி.மு.க சட்டமன்றத்தில் அறிவித்த திட்டத்தைத்தான் தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க இன்று வெளியிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இன்று 164 திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடும் வறட்சியால், புயலால் வேளாண் பெருமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 14 லட்சம் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் நாங்கள் அறிவித்த அறிவிப்புகளைத் தான் தேர்தல் அறிக்கையாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

  விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அரசாணை போடப்பட்டுள்ளது. அதைத் தான் தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர். தி.மு.கவின் 13 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளது. அதனைச் சென்று அவர்கள் சந்திக்கவேண்டும். ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே தி.மு.கதான்.

  ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களைத் தண்டிக்கும். ஜெயலலிதா சிறந்த ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் மீது அவதூறான வழக்குகளைத் தொடர்ந்தனர். ஜெயலலிதா மறைந்ததற்கு காரணம் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும்தான். சட்டமன்றத்தில் 12,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: