திமுக என்றாலே அராஜகக் கட்சி - முதல்வர் பழனிசாமி கடும் தாக்கு

திமுக என்றாலே அராஜகக் கட்சி - முதல்வர் பழனிசாமி கடும் தாக்கு

எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். திமுக போன்ற ரவுடி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் குற்றம்சாட்டினார்.

 • Share this:
  தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பல கட்சிகளும் தீவிரமாக பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் எதிர்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியும் வருகின்றன. அவ்வகையில்,  கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் ஊழல் திமுகவினர் கோரப்பசியில் இருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதலே ஊழல் பிறந்துவிட்டதாக சாடினார். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் ஊழலை மட்டுமே செய்ததாகவும், திமுக என்றாலே ரவுடிக் கட்சி, அராஜகக் கட்சி என்றும் முதலமைச்சர் சாடினார்.

  தொடர்ந்து பேசிய முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். திமுக போன்ற ரவுடி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, அரசின் திட்டங்களை பட்டியிலிட்டு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரினார்.
  Published by:Ram Sankar
  First published: