முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இதன் மூலம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தப்படுவதாகவும், அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்துவதோடு, வரும் மே 31-ம் தேதியுடன் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த வயது வரம்பு, கொரோனா காலத்தில், கடந்த ஆண்டு 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

Must Read9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி - முதலமைச்சர் அறிவிப்பு

இந்நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: CM Edappadi Palaniswami, Retirement, TN Assembly