கமலா ஹாரிஸால் தமிழகத்திற்கே பெருமை - முதல்வர் பழனிசாமி வாழ்த்து

முதல்வர் பழனிசாமி - கமலா ஹாரிஸ்

அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனின் ஆதரவாளர்கள், நியூயார்க்கின் Times Square முன் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

 • Share this:
  அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், 290 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ”அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கு மனம் நிறைந்த வாழத்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

  அத்துடன் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸ்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், இந்த வெற்றியின் மூலம் அவர் தமிழகத்தை பெருமைப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க...வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்... பிரதமர் மோடி வாழ்த்து

  இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் வெற்றி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனின் ஆதரவாளர்கள், நியூயார்க்கின் Times Square முன் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் வெள்ளை மாளிகை அருகே உள்ள வீதிகளில் திரண்ட ஜோ பைடனின் ஆதரவாளர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

  கமலா ஹாரிஸ்


  மேலும் படிக்க...ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

  அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கும் கமலா ஹாரிஸ்க்கும் பிரதமர் நரேந்திர மோடியும் பல உலக அதிபர்களும்  தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Vaijayanthi S
  First published: