பிரதமர் மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம், ஜி எஸ் டி நிலுவைத் தொகை, புயல் நிவாரணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக இரு நாள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

  நாளை மதியம் 12 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் வாயிலாக டெல்லி செல்லும் முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையின் போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.

  காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம், ஜி எஸ் டி நிலுவைத் தொகை, புயல் நிவாரணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், பிப்ரவரி 24ம் தேதி நடைபெறவுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், தேர்தல் குறித்து பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   
  Published by:Vijay R
  First published: