தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது என்பது குறித்து முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் நாளை முடிவாக உள்ளது.
முதலமைச்சர் தலைமையில் நாளை நடக்கும் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். ஏற்கனவே அறிவித்தபடி, விலையில்லா முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்கப்படுகிறது.
மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குறுவை சாகுபடிக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்று வருகின்றன. அரசு பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், தேர்வுகள் நடைப்ந்றுவது தொடர்பாக தெளிவில்லாத நிலையாக நீடித்துக்கொண்டிருக்கிறது. தற்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளை திறந்து பாதுகாப்பான முறையில் மாணவர்களை வரவழைத்து பாடம் கற்பிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதற்காக முதலமைச்சர் நாளை முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.