குடும்பங்களை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசனால் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்ய முடியாது - முதல்வர் பழனிசாமி

குடும்பங்களை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசனால் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்ய முடியாது - முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

குடும்பங்களை சீரழிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலஹாசனால், மக்களுக்கு எந்த நல்லதையும் செய்ய முடியாது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 • Share this:
  குடும்பங்களை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசனால் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்ய முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  அரியலூர் மாவட்டத்திற்கு சென்று வருவாய் மற்றும் வேளாண் உள்ளிட்ட துறைகளின் கீழ் 129 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதேபோல், நகராட்சி நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முடிவுற்ற 39 திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

  மின்சாரம், பள்ளிக்கல்வி உள்ளிட்ட துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரியலூர் மாவட்டத்தில் பழுப்பு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் வழங்க 8 சதவீதம் பேர் மட்டுமே மறுப்புத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  மேலும், குடும்பங்களை சீரழிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலஹாசனால், மக்களுக்கு எந்த நல்லதையும் செய்ய முடியாது என்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர் அரசியல் கட்சி தொடங்கினால் எப்படி இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்ன இருக்கிறது? கமல் நல்லது செய்வதாக தெரியவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: