காவிரியின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக முதலவர் தெரிவித்தார்.

காவிரியின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி
  • News18
  • Last Updated: July 15, 2019, 2:33 PM IST
  • Share this:
மழைக் காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் உபரி நீரை சேமிக்க காவிரியின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்துவருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, கொள்ளிடத்தில் கட்டப்படும் பணியில் தண்ணீரை சேமிக்கும் முயற்சி மேற்கொள்ளாததால் வீணாக உபரி நீர் கடலில் சென்று கலப்பதாக கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கனமழை காலங்களில் வரக்கூடிய நீரை 120 அடி மட்டுமே சேமிக்க முடியும் எனவும், அதற்கு மேலாக வரக்கூடிய நீர் அனைத்துமே கடலில் சேர்வது வழக்கமான ஒன்று என தெரிவித்தார்.


மேலும் நீரை சேமிக்கும் வகையில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவிரியின் குறுக்கே மேலும் 3 இடங்களில் தடுப்பணை கட்டும் பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மழைக்காலங்களில் எங்கெங்கெல்லாம் மழை நீர் வீணாகிறதோ அங்கெல்லாம் தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் எனவும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் நேரு, தமிழகத்தில் கால்வாய்கள், ஏரிகள் முறையாக தூர்வாரப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும் படிக்க... மழைநீர் சேமிப்பால் கோடையிலும் சமாளிக்கும் வேலூர் மருத்துவ தம்பதிகள்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading