"தேர்தலுக்காக ரூ.2,000 வழங்கவில்லை" முதலமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் உள்ள உழைப்பாளிகளுக்கு கொடுக்கின்ற நிதி என்றும், கட்சி சார்பற்று அனைவருக்கும் இந்த நிதி கொடுக்கப்படுவதாகவும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

news18
Updated: February 12, 2019, 2:19 PM IST
சட்டப் பேரவையில் முதல்வர்
news18
Updated: February 12, 2019, 2:19 PM IST
தேர்தலுக்காக 2,000 ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, 2,000 ரூபாய் சிறப்பு நிதி அறிவிப்பு குறித்து திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்காக 2,000 ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்படவில்லை என்று கூறினார்.

தமிழகத்தில் உள்ள உழைப்பாளிகளுக்கு கொடுக்கின்ற நிதி என்றும், கட்சி சார்பற்று அனைவருக்கும் இந்த நிதி கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஈமச்சடங்கு நிதியான 2,500 ரூபாய் கிடைக்காத குடும்பங்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார்.

Also read... ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித் தொகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Also see...
Loading...
First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...