ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதால் நூற்றுக்கு 60 சதவீதம் பெண்கள்பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆம்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என கணவு மட்டுமே காண்பார் எனவும் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று அதிமுக மகளிர் அணி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ‘திமுக ஆட்சி காலத்தில், மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை. அவர்களின் குறைகளையும் தீர்க்க வில்லை. ஆனால் தற்போது, பொதுமக்களிடம் சென்று குறைகளை கேட்டு வருகிறார். திமுக ஆட்சியில் செய்யாததை இப்போது அவர் எப்படி செய்வார்’ என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்காக சிந்திக்காமல், தன் வீட்டு மக்களுக்காக சிந்தித்து ஆட்சி நடத்தினார்கள். முதலமைச்சராகலாம் என அவரால் கணவவு மட்டுமே காண முடியும். அனால் அவரால் முதலமைச்சராக ஆக முடியாது.

சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பிற்கான அரசாக தமிழக அரசு உள்ளது. தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக நிலவி வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திமுகவாக இருந்தாலும் அதிமுக அரசுதான் ஆம்பூர் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி உள்ளது.மேலும் இந்த நகரில் குடிநீர் பிரச்சினைகள் கேட்கப்பட்டுள்ளது.

மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மக்களிடம் வாக்கு சேகரிக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள் அவர்களின் எண்ணம் நிறைவேறாது. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர். சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என எதிர்க்கட்சியினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

சிறுபான்மை மக்களுக்காக ரமலான் நோன்பு கஞ்சிக்காக தமிழகத்தில் உள்ள சுமார் 3000 பள்ளிவாசல்களுக்கு 5,545 மெட்ரிக் டன் அரிசி வழங்கி வருகிறது. ஹஜ் புனித பயணத்திற்கு 6 கோடியில் இருந்து பத்து கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தோம், தற்போது 90% முதியவர்களுக்கும் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

தமிழகத்தில் 81 ஆயிரம் கோடிரூபாய் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி இணைப்பு கடனாக வழங்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்காக 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்டுள்ளது.

பணி செய்யும் பெண்களுக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 12 லட்சத்து 59 ஆயிரம் மகளிருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றம் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இது போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதால் நூற்றுக்கு 60 சதவீதம் பெண்கள்பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டுதான் பெண்களுக்கு பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க... குட்கா விவகாரம்: 2 ஆவது உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் இதுவரை 67 லட்சம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது” என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

First published:

Tags: ADMK, Ambur, Edappadi Palanisami, Election Campaign, TN Assembly Election 2021