மதுரையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு கோவில் - முதல்வர் பழனிசாமி திறப்பு

Youtube Video

இந்த கோவிலில், தலா 400 கிலோ எடையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு முழு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மதுரையில் கட்டப்பட்டுள்ள கோவிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

  திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூர் பகுதியில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஏற்பாட்டின் பேரில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில், தலா 400 கிலோ எடையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு முழு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

  கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நடைபெற்ற பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நடைபெற்ற கோ பூஜையில் பசுவிற்கு, ஈபிஎஸ், ஓபிஎஸ் சேர்ந்து உணவளித்தனர்.

  கோவிலுக்கு வந்திருந்த புதுமண தம்பதியினருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சேர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, யாக சாலையில் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மரக்கன்றை நட்ட பின், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் கோவில் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  Published by:Vijay R
  First published: