நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள தயங்குவது ஏன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு குறித்து திமுக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகள் குறித்து விவரிக்க திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சரைப் போல் வழக்குகளுக்கு அஞ்சி தாங்கள் ஓடி ஒளிந்துகொள்ளவில்லை என கூறினார்.
வர்த்தக தொடர்புள்ளவர்களுக்கும், இரத்த உறவுகளுக்கும் டெண்டர் வழங்கக் கூடாது என்பது உலக வங்கியின் விதிமுறைகளில் உள்ளதாகவும், ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, தாங்களாகவே ஒரு விதியில் மாற்றம் செய்து, அதனை நீதிமன்றத்திலேயே வாதாடியதாகவும் ஆ.ராசா குற்றம்சாட்டினார். மத்திய அரசுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்தினாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு, சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஆ.ராசா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Edappadi Palaniswami, Highway Tender Scam, Lok Sabha Key Candidates