• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதலமைச்சரின் காப்பீடு திட்டம்: சிகிச்சைக்கான தொகை ₹5 லட்சமாக உயர்வு

முதலமைச்சரின் காப்பீடு திட்டம்: சிகிச்சைக்கான தொகை ₹5 லட்சமாக உயர்வு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து இத்திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமின்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச காப்பீட்டுத் தொகையை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1.58 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருவதாகவும், இத்திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் பேர் 5,133 கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள காப்பீட்டுத் தொகையை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவேண்டும் என கோரிக்கை வந்ததாகவும் அதையேற்று, காப்பீட்டுத் தொகையை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து இத்திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமின்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: