10,000 தடுப்பணைகள், 3 சட்டக் கல்லூரிகள்! முதலமைச்சர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் என்ன?

தமிழகம் முழுவதும் 312 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

news18
Updated: July 10, 2019, 4:36 PM IST
10,000 தடுப்பணைகள், 3 சட்டக் கல்லூரிகள்! முதலமைச்சர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் என்ன?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
news18
Updated: July 10, 2019, 4:36 PM IST
தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் 5,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 312 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 12,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும் என தெரிவித்தார்.

புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Also see...

First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...