275 நவீன பேருந்துகளின் சேவை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சென்னை மாநகருக்கு 17 சிவப்பு பேருந்துகள், சேலத்திற்கு 30, விழுப்புரத்திற்கு 66, கும்பகோணத்திற்கு 23, கோவைக்கு 14 என மொத்தம் 275 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

275 நவீன பேருந்துகளின் சேவை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: February 14, 2019, 12:00 PM IST
  • Share this:
தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சுமார் 69 கோடி ரூபாய் மதிப்பிலான 275 அதிநவீன பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகருக்கு 17 சிவப்பு பேருந்துகள், சேலத்திற்கு 30, விழுப்புரத்திற்கு 66, கும்பகோணத்திற்கு 23, கோவைக்கு 14 என மொத்தம் 275 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளின் இருபுறமும் அவசரகால வழி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இறங்கும் இடத்தை அறிவித்திடும் ஒலி பெருக்கி வசதி, ஓட்டுநருக்கு மின்விசிறியும் இதில் வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தாங்கள் கொண்டு வரும் ஊன்றுகோலை பாதுகாப்பாக வைத்திட வசதி, அவர்கள் இறங்கும் இடத்தைத் தெரிவித்திட ஒலி அழைப்பானும் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த 275 பேருந்துகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Also see...

First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்