கண்தானம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தேசிய கண் தான தினம் நாளை கடைபிடிக்கப்படவுள்ளநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய கண்களைத் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.

கண்தானம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
  • Share this:
தேசிய அளவில் நாளை கண் தான தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதனை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில், http://hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக கண்தானம் செய்பவர், தானம் பெறுபவர் என ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் திறந்துவைக்கும் நிகழ்வின்போது, முதல்வர் அவருடைய கண்களைத் தானம் செய்வதாக தெரிவித்து அதற்கான உறுதிமொழி அளித்து அந்தச் சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.


இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘பார்வையின்றி தவிக்கும் ஒளியிழந்தோருக்கு செய்திடும் கண் தானமானது தானத்தில் சிறந்தது.


அப்புனிதமான கண் தானத்தின் பயனறிந்து, எனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியினை அளித்ததையடுத்து, அதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் அவர்கள் வழங்கினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading