ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜக கூட்டணியில் பதவி சுகங்களை அனுபவித்தது திமுக- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பாஜக கூட்டணியில் பதவி சுகங்களை அனுபவித்தது திமுக- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஈழத் தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``திமுக ஆட்சிக்காலத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது, தற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பத்து நாட்கள் கூட இந்த ஆட்சி நிலைக்காது என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால் இதே ஆட்சி ஒரு வருடம் ஏழு மாதம் ஆட்சியில் நிலைத்து வருகிறது.

திமுகவினர் தான் ஒப்பந்த பணிகளில் ஊழல் புரிந்தனர். திமுக ஆட்சியில் பெட்டியில் மனு அளித்து ஒப்பந்தத்தில் பங்கேற்கும் முறை இருந்தது, அதன் மூலம் ஊழல் நடத்தினார்கள். அதிமுக ஆட்சியில் அனைத்து பணிகளும் நேர்மையாக நடைபெறும் இ-டென்டர் முறையை பின்பற்றி வருகிறது.

ஆர்காடு வீராசாமி மின் துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் ஆட்சி கவிழும் அளவிற்கு மின் வெட்டு உள்ளதாக அவரே ஒப்புக்கொண்டார். அதிமுக அரசு பொருப்பேற்ற பிறகு மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஒற்றை சாளர முறை பின்பற்றப்படுவதால், தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டாளர் மாநாட்டில் முன்வந்துள்ளன. தமிழகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு நிறுவனங்கள் முதலீடு கிடைக்க உள்ளது. இதன் மூலம் 6 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி வைத்து பதவி சுகங்களை அனுபவித்தவர்கள் திமுகவினர். பச்சோந்தி கூட சிறிது நேரத்திற்கு ஒருமுறைதான் நிறமாறும். ஆனால் திமுகவினர் உடனுக்குடன் மாறிவிடுகின்றனர் என்று கூறினார்.

First published:

Tags: ADMK, Admk protest, Cm edappadi palanisamy, DMK