மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி செல்ல ஈபிஎஸ் - ஓபிஎஸ் திட்டம்?

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மேற்கொள்ள இருக்கும் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்த வாரம் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  அதிமுக அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டு வருகின்றது. அதன் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன.  அதனைத் திறந்துவைப்பதற்காக இந்த பயணம் மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகின்றது.

  இந்நிலையில், டெல்லி செல்லும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அந்த அலுவலகத்தை திறந்துவைக்கக் கூடும் என சொல்லப்படுகின்றது. அவர்களுடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரும் டெல்லிக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளார். இதனால், தமிழக அரசியல் களம் புழுதி பறக்கத் தொடங்கியுள்ளது.

  இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் டெல்லி செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. டெல்லியில் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை சந்திப்பார்களா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

  கடந்த மாதம் (ஜனவரி- 18) டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்துப் பேசினார்.

  இந்நிலையில், அதிமுக டெல்லி அலுவலகத்தைத் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் திறந்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  மேலும் படிக்க... அடக்குமுறைக்கு என்றும் அடிபணியமாட்டேன் - சசிகலா சூளுரை

  சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மேற்கொள்ள இருக்கும் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: